முகப்பு பக்கம்
நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கின்ற போது, திரைப்படம் ஒன்றினை பார்க்கின்ற போது இல்லையேல் ஓய்வாக இருக்கின்ற போது ஒரு தேநீர்க் கோப்பையை சுவைப்பீர்களாயின்? அது உங்களுக்கு எந்தளவு தித்திப்பையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இருக்கும்? ஆயினும், அந்த உன்னத தேநீர்க் கோப்பையின் சுவைக்கு அடிமையான கண்ணீர்க் கதையை நீங்கள் அறிவீர்களா? அந்த தேநீர்க் கோப்பைக்காக உழைத்து பாடுபடும் சகோதர மக்கள் தொடர்பில் ஒரு கனமாவது சிந்தித்து பார்த்ததுண்டா? நாம் இங்கு முன்வைப்பது, அத்தித்திப்பான தேநீர்க் கோப்பைக்குள் மறைந்து கிடக்கும் அந்த மக்களின் வாழ்க்கை பற்றிய கதையையாகும்”
எமது விபரங்கள்
தொகுப்பு
இளைஞர்கள்
“தோட்டம் என்பது மரஞ் செடிகள் அல்ல. தோட்டம் என்பது மக்கள். மக்களது வாழ்க்கை, அவர்களது தலையெழுத்து. பல வருடங்களாக எமது நாட்டுக்கு அந்நியச் செலவாணியைப் போலவே தினமும் காலையில் தேநீரும் கிடைக்கின்றது. இந்நாட்டில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்த தேநீரை அருந்துகின்றனர். ஆனால் யாருக்கும் தெரிவதில்லை, இந்த தேநீர் எவ்வாறு வந்ததென்று. நான் கூறுகின்றேன், அதுதான் எமது மனச்சாட்சியின் காயம் என்று. இந்தக் கடனை மீள செலுத்த நாம் தயார் நிலையிலும் இல்லை. அப்படியொரு எண்ணமும் இல்லை. நாம் ஒழுக்க ரீதியில் ஒரு பிரச்சினையில் இருக்கின்றோம். அந்த கடனை செலுத்தாமல் மனிதர்களாக நாம் முன்னோக்கி பயணிக்க முடியாது. நாம் மனிதர்களாக மாறவேண்டுமாயின் இந்த மக்களுக்கு அவர்களது வாழ்க்கைக்கான கடனை செலுத்த வேண்டும். அது ஒழுக்கம் சார்ந்த கடனாகும். அந்த கௌரவத்தினை பெற்றுக் கொடுத்து அவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை மதிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுவரையில் நாம் மனிதர்களாக முடியாது.
இந்த புகைப்படக் கண்காட்சியானது பல வழிகளிலும் சிறப்பானதாக விளங்குகின்றது. இளம் கலைஞர்கள் தோற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் அவர்களது வாழ்க்கையை விபரிக்க முயற்சி எடுத்துள்ளனர். இதில் எந்தவொரு புகைப்படமும் பொய்யானதன்று. இவற்றுள் அர்த்தபுஷ்டியான பல புகைப்படங்கள் உள்ளன.”
கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன”
“இந்த புகைப்படங்கள் வாயிலாக எமக்கு தெரிவிக்கும் மற்றுமொரு கதையும் உள்ளது. எமது நாட்டின் அரசியலில் வேரூன்றியுள்ள வஞ்சகமும் முட்டாள்தனமும் பற்றிய கதையாகும். 2020 ஆம் ஆண்டில் இந்த இளைஞர் யுவதிகள் தமது வாழ்க்கையின் யதார்தத்தினை இந்தளவு சோகம் நிறைந்த விதமாக முன்வைக்க வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? சுதந்திரத்திற்குப் பின்னர் தேசிய அரசியலானது இந்த சமூகத்தினரை பிரித்தானிய அடிமை யுகத்தில் அவர்கள் இருந்த நிலையிலிருந்து முறையாக மீட்டெடுக்கவில்லை என்பது மிகத் தெளிவான விடயமே. அத்துடன், இந்த சமூகத்தினரை பிரதிநிதித்துவம் செய்வதாக தம்பட்டம் அடிக்கின்ற அகில இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய அரசியல் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ள வியடம் யாதெனில், அவர்கள் இந்த சமூகத்தினரை வறுமையின் பிடியில் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர் என்பதாகும்.
… நான் நினைக்கிறேன் தமது புகைப்படங்கள் மூலமாக இந்த இளைஞர் யுவதிகள் கேட்கின்ற கேள்வி யாதெனில், தமது இந்த யதார்த்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதாகும். கவலைக்குரிய விடயம் யாதெனில், இந்த துரதிஷ்டவசமான நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருள் ஒரு பிரிவினர் வாழ்வதும் இவர்களுக்கு மத்தியிலேயே என்பதாகும். மறு பிரிவினர் வாழ்வதோ எமக்கு மத்தியிலாகும்.”
பேராசிரியர் சசங்க பெரேரா
முகவரி:
No 6/ 5,Layards Rd, Colombo 00500, Sri Lanka
தகவல்:
info@cpalanka.org
T: +9411 2081384, +94112081385, +94112081386
F: +9411 2081388